{இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்}
ஆகஸ்ட் 15,2022
--------------------------‐------------------------------
எனக்கின்று வயது எழுபத்து ஐந்து.
இணந்துவா என்னுடன்,நீயும் இசைந்து.
மூவர்ணக் கொடியை நீவணங்கும் நேரம்,
நாவினில் உண்மைக்கு,நீட்டாதே தூரம்.
வரலாறு மாற்றும் வழிமறந்தோர் வாக்கு,
பெருவிரல் தாழ்த்தியே நீஇன்று நீக்கு.
சளைக்காமல் போராடி பெற்றநல் சுதந்திரம்
அளப்பினில் மாற்றுதல் அவரவர் தந்திரம்.
'புதியதோர் உலகம்'என்பதிங்கு புதினம்;
விதியை மாற்றிட,விரைந்திடு நீ தினம்.
பழமையும் புதுமையும் கலப்பதே மானுடம்;
முழுமை இந்தியா,முகப்பினில் மானிலம்.
அவரவர் உரிமையைக் காப்பதே ஒன்றியம்.
அனைவரின் குரலில்,அறவழி வென்றிடும்.
ப.சந்திரசேகரன்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் சார்
ReplyDelete"அவரவர் உரிமையைக் காப்பதே ஒன்றியம்.
ReplyDeleteஅனைவரின் குரலில்,அறவழி வென்றிடும்" உண்மையான வார்த்தைகள் சார்.. .
நன்றி,திரு.மணிகண்டன்.
ReplyDeleteமகிழ்ச்சி அய்யா....
ReplyDelete