எலிகளின் பொந்துகளில்
பாம்பிற்கு இடமில்லை;
பாம்புகள் படையெடுக்க,
எள்ளுக்கு எலிகளில்லை
உழக்கு அரிசிக்கு
உலக்கை தேவையில்லை;
உலக்கையின் இடியில்
குருணையில் அரிசியில்லை.
படியளக்கும் மன்னனுக்கு
பரதேசம் தேவையில்லை;
பரதேசி நினைத்தாலும்
படியளக்க வாய்ப்பில்லை.
விடியலுக்கு காத்திருப்போர்
பகலவனை பகைப்பதில்லை;
பகலவனின் பகைதனிலே
பசும்புற்கள் நிற்பதில்லை.
அகல்விளக்கின் ஒளியினிலே,
அந்தியிருள் புகுவதில்லை;
அந்தியிருள் ஆட்டத்திற்கு
ஆதவனின் மேடையில்லை.
அல்லலின்றி ஆக்கமில்லை;
ஆக்கம்பெறின் அல்லலில்லை.
கல்லுமட்டும் கடவுளில்லை;
கடவுளொன்றும் கல்லுமில்லை.
ப.சந்திரசேகரன்.
Arumai. Books potteerkalaa
ReplyDeleteஇன்றுவரை அதுபற்றி யோசிக்கவே இல்லை சகோ.
ReplyDelete