மொட்டை மாடியில்
மல்லாந்துப் படுத்து
வானத்தைப் பார்த்திட ,
விழிகளே வானத்து
விந்தைகளின் பல்லக்கு.
கெட்டியாய் மடிதனில்
குழந்தையைப் பற்றி
கனிவுடன் கொஞ்சிட,
தாய்மடி தருவதே
மழலைக்கு பல்லக்கு.
அரியதாய்க் கருத்துக்கள்
அறிவுடன் வலம்வர,
ஆதாரம் காட்டும்
மூளையின் மேடையே,
அறிவிற்கு பல்லக்கு.
பெரியதாய் மானுடம்
பேருடன் தழைத்திட ,
போரிலா வேர்களாய்
படர்ந்திடும் கருணையே,
சமத்துவப் பல்லக்கு.
சமரசம் சார்ந்து,
சாத்திரம் மாற்றியே,
சமூகம் சுமக்கையில்
ஆனந்தம் அமருதல்,
ஆன்மீகப் பல்லக்கு.
ப சந்திரசேகரன்
No comments:
Post a Comment