கூட்டணிகள்!வாக்குறுதிகள்!வரிசையாய் பிரச்சனைகள்! 2016 முதல் 2021 வரை காணாமல்போன,தமிழகத்தின் தனித்தன்மை வாய்ந்த அரசியல் முகத்தினை,அதன் சுயமரியாதையினை மீட்டெடுத்து,மாநிலத்தின் உரிமைகளை நிலைநிறுத் துதல்,இதுவரை எந்த தமிழக முதல்வருக்கும் இல்லாத புதிய சவால்!
தி.மு.க வுக்கும் அ.இ. அ.தி.மு.க வுக்கும் செயல்பாடுகளில் வேறுபாடு இருந்தாலும் ஜெயலலிதா அம்மையார் உடல் ஆரோக்கியமாக இருந்த வரை,மாநிலத்தின் குரல் கம்பீரமாகத்தான் ஒலித்துக்கொண்டிருந்தது.
ஆனால்,அவர் மறைந்த பிறகு பதவிக்காக மாநிலத்தின் உரிமைகளை ஒட்டு மொத்தமாக தேசியக் கடலில் கரைத்தவர்களால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழுக்கினை அகற்றி,மீண்டும் புதிய உத்வேகத்தோடு இழந்த பெருமையை புணரமைப்பதே,திரு.ஸ்டாலினின் முதல் கடமையாயிற்று.
நான்கு ஆண்டுகளாக தேய்ந்துபோன உரிமைகளும்,அந்த தேய்மானங்களுக் கிடையே முலாம்பூசப்பட்ட மதச்சாயங் களும்,முதல்வர் பொறுப் பேற்று ஓராண்டேயான,ஸ்டாலின் அரசிற்கு,பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளன என்பதே,அப்பட்டமான உண்மை.
கூட்டணிகளை முதல்வர் ஸ்டாலின் பக்குவமாக கையாண்டு தன்னகத்தே வைத்துக்கொண்டார் என்று சொல்வதைக்காட்டிலும்,அவரின் பக்குவமும், நிதானமும்,விட்டுக் கொடுக்கும் மனப்போக்கும்,அரசியல் பாடப்புத்தகத் தில் வரவேற்கத்தக்க முன்னுதாரணப் பக்கங்கள் ஆயின எனலாம்.தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளும்,அவை அனைத்தையும் நிறைவேற்றுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களும், அவருக்கே புதிய பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கும்.
இருப்பினும்,முதன்மையான வாக்குறுதிகளில் பலவும்,குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டிருப் பதும்,பல்வேறு சமூக நலத்திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதும்,முதல்வரும் அவரது அமைச்சரவை சகாக்களும், தங்களது தார்மீக பொறுப்புகளை நிறைவேற்றுவதில்,எப்போதும். முழுமனதுடன் உறுதி பூண்டிருப்பதை, மைய்யப்படுத்துகின்றன.
'நீட்'தேர்வு விலக்குக்கான உறுதி மொழியும்,அது தொடர்பாக அவையில் நிறை வேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களும்,மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசுகள்,ஒன்றிய அரசுக்கு எதிரான கொள்கை சித்தாந்தம் கொண்டிருப்பின், அவைகள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை, இந்திய அரசியல் சட்டத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம், பலரின் பார்வைக்கு புலப்படுத்தின.ஒன்றிய அரசின் பிரதி நிதிகள், திட்டமிட்டு காலதாமதத்தை. ஏற்படுத்தி,'நீட்'போன்ற சமூகம் சார்ந்த, மாணவச் சமூதாயத்தின் எதிர்காலம் சார்ந்த,முக்கிய பிரச்சனை களை,முரண்டு பிடித்து முடக்கிப்போடுகின்றனர்.
'நீட்'விலக்கு மசோதா மட்டுமல்லாது பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்வதற்கான மசோதா உட்பட,நான்கு ஆண்டுகளில் கரைந்து போன மாநில உரிமைகளை, ஒவ்வொன்றாய் மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது,ஸ்டாலின் அவர்களின் அரசு.
உள்ளாட்சி அதிகாரங்களுக்கான அங்கீகாரம்,தேர்தல் மூலம் முழுமை பெற்றிருக்கிறது.மக்களின் பிரச்சனைகள் கவனத்திற்கு வந்தவுடன் விரை வாக தீர்க்கும் நடைமுறையும்,அவ்வப்போது மக்களோடு இணைந்து அவர்களின் பிரச்சனைக்குரல்களை கேட்டு,அவற்றின் நியாயத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றுதலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இல்லம் தேடிச்சென்று,அவர்களின் மனநிலையை பகிர்வதும், வெறும் அரசியலாக அல்லாது,இயல்பான நிகழ்வுகளாகவே அறியப் படுகின்றன.
இன்றைக்கு திரு.ஸ்டாலின் அவர்களின். அரசுக்கு இருக்கும் பெரும் குடைச்சலே, சமூகப்பிரச்னைகளை புறந்தள்ளி,மத அரசியல் புரிவோரின் தாறுமாறான பேச்சுகளும் நடவடிக்கைகளுமேயாகும். ஆனால் இதைவிட மிகப்பெரிய'மிசா பிசாசை'சந்தித்தவருக்கு,மதவாதத்திற்கும் திராவிட சித்தாந்தத்திற்குமிடையே, நெளிவு சுளிவோடு பயணிப்பதில்,சிரமம் இருக்கப்போவதில்லை.
மதவாதிகள் நினைப்பது போல, மதமாற்றம் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு கள்,பல்லக்குகளின் பட்டினப்பிரவேசம் போன்ற வற்றால், தகர்க்கப்படக் கூடிய மண் கோட்டை அல்ல தமிழகம். அவ்வாறு அவர்கள் நினைப்பார்க ளாயின்,அது அவர்களின் மனக் கோட்டையே!தமிழகத்தின்.அரசியல். மாண்பு பல்வேறு பலவீனங்களுக் கிடையே நிலைத்து நிற்பதற்குக் காரணமே, இங்கே காலம் காலமாக வேரூன்றியிருக்கும் சமத்துவம், சகோதரத்துவம்,சுயமரியாதை, சமூக நீதி எனும் நான்கு தூண்களாகும்.
நிதானத்தை மட்டுமே ஆளும் கருவியாக எடுத்துக்கொண்டிருக்கும் திரு.ஸ்டாலினால்,கூட்டணியை மட்டுமல்ல,தேவைப்பட்டால்,எதிரணி யையும் அரவணைத்து அரசாளும் ஆற்றல்,அவரையும் அவரது அரசையும், வரையறுக்கப் பட்ட அளவு கோல்களுடன்,அடையவேண்டிய இலக்குகளை,அடையச்செய்யும். இதற்கு,திரு.ஸ்டாலினின் ஓராண்டு அரசு ஆரம்பப் புள்ளியாகும்.
பொருளாதாரம் சீர்செய்யப்பட்டு,கல்வி, தொழில் ஆகியவற்றின் முன்னேற்றமும், மக்களின் அன்றாட பயன்பாட்டிலுள்ள கட்டுமானப் பணிகள் மேம்படுத்தப் படுத்தலும் முழுமைபெறும் தருவாயில், ஸ்டாலின் அவர்களும்,அவர் தலைமையேற்கும் இயக்கமும்,அளித்த இதர வாக்குறுதிகளை,ஒவ்வொன்றாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை, அவருக்கு உள்ளது போல் மக்களில் பலருக்கும் உண்டு. இந்த நம்பிக்கை விரைவில் நிசமாகும்.
உதாரணத்திற்கு பள்ளிக்கல்வி தொடர்பாக,அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் கற்கும் வண்ணம்,ஒரு செயலியை பயன்படுத்தும் வகையில்,கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது,பள்ளிக்கல்வியின் தரத்தினை உயர்த்தும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.
கோவிட் தொற்றினை மக்கள் நலத்துறை அமைச்சர்,அவரது செயலர் துணையுடன் வென்றெடுத்ததுபோல, இளைய நிதியமைச்சருடன் அவரின் அணிசேர்ந்த பொருளாதார நிபுணர்களின் துணையோடு, பொருளாதார பிரச்சனை களை வென்றெடுப்பார்,முதல்வர். ஆன்மிகம், திராவிடம் ஆகிய இரண்டிற் குமிடையே, அறநிலையத் துறை அமைச்சரின் துணையோடு,அங்குசம் பற்றி,'மத'யானை வெல்வார் .
எல்லோரும் சொல்லுவதை செவி கொடுத்துக் கேட்டு,தெளிந்த நீரோடை யான மனம் கொண்டு,பிரச்சனை களுக்கு முடிவெடுக்கும் தலைமை,வெற்றிப் படிகளின் உயரம் கண்டு, இந்தியக் குடியரசில் தமிழகத்தை, மேலும் முன்னிலைப் படுத்தட்டும்!
===============0===============
Nice presentation.
ReplyDeleteThank you.
Delete