கனவுகள் கார்த்திகை தீபமானால்,
விழிக்கையில் வெளிச்சம் விசாலமாகும்!.
பகைதனை புகாது விரட்டிடின்,
படிதனில் பிரகாசம் கூடும்;
வெறுப்பிலாச் சமூகம் விரிந்திட
விளக்கின் திரிகள் பலமடங்காகும்.
வசையிலா வார்த்தையின் பயணத்தில்
திசையெலாம் மொழிகள் தேரிழுக்கும்.
தரைக்கு வானம் அண்ணாந்து பார்க்கவோ
திரைக்குள் ஒளிதனை திரட்டிக் கூட்டவோ?
அறிவின் வெளிச்சம் அகத்தினில் படர்ந்து ,
குறைவிலா குணங்கள் குழுமம் படைக்கும் .
மறைவுகள் இல்லா மனதின் உண்மைகள்,
பிறை நிலவாகிப் பெறுக்கிடும் வெளிச்சம்.
விரிந்ததோர் பார்வை வெளிச்சம் படைத்திட
எரிந்திடும் பொய்களில் எழுவதே மானுடம்!
ப சந்திரசேகரன்
No comments:
Post a Comment