{இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்}
தேருடன் பிறந்திடும் மாதமே சித்திரை;
ஊருடன் கூடுவர் உவகை பெருக்கியே!
நீரின்றி அமையா உலகினைப் போல,
தேரின்றி நகராது திருவிழா மாதம்.
ஆருடம் கூறவும் ஆசைகள் கூடவும் ,
ஓரிடம் அகன்று உலகியல் பார்வையில்,
பேரிடர் களைந்து,பெருமிதம் கொள்ளவும்.
யார்வழிப் போயினும்,நேர்வழி நன்றாம்.
மார்தட்டிப் பேசுதல் மானுடம் மட்டுமே;
ஓர்முறைக் கூறுதல் உண்மை ஆகிடின்,
தீர்ப்பினில் நீதி தெறித்திடல் போல,
வார்ப்பென வாய்மை வகுத்தல் வலுவே!
சீர்மிகு சித்திரை துளிர்த்திடும் நேரம்
சார்பிலாச் சமூக நியாயங்கள் தழைத்து,
தேருலாக் காண,தெருவெலாம் திரளும்;
மார்புகள் விரிந்திட,மனப்பகை மிரளும்.
ப சந்திரசேகரன் .
No comments:
Post a Comment