Sunday, November 28, 2021

மொழி

 

மொழிமீது மோகமில்லை; 

அழகழகாய் ஆசையுண்டு. 

எழுத்துக்கள் ஏற்றம்பெற 

சொற்கள் சுகம்கூட்டும்; 

சொற்கள் செழுமையுற 

வாக்கியங்கள் வாழ்த்துரைக்கும். 

வாக்கியங்கள் அரங்கேற 

சிந்தனைகள் சிரசேறும். 

இக்கணம் ஒழுங்காக்க, 

இலக்கணம் இறங்கிநின்று 

தலைக்கனம் சிறிதுமின்றி,

தவறுகளை தரம்பிரிக்கும். 

அரசியில் கல்லகற்றி,

பாலினில் நீர்சேர்க்கா 

பக்குவம் பரிந்துரைக்க, 

பிழைகளை புறந்தள்ளி

மொழிபிறந்து முழக்கமிடும் .

ஒலியும் எழுத்தும்

ஒளியேற்றும் வழியாகி, 

உலகக்கும் பயணத்தில்

வாயின் வார்த்தைகளாய், 

வரலாற்று  டுகளாய்

வாழ்க்கையின் பொருளுரைக்கும். 

உலகின் உயர்வெல்லாம் 

மலைமருளும்  மொழித்திரளே.

பன்னாட்டின் பல்களை 

பண்பாட்டுச் சுவையோடு 

பதம்பார்க்க செய்வதெல்லாம் 

நிதநிரலின்  மொழியளவே.

மூச்சின்றி பேச்சில்லை; 

பேச்சினையே மூச்சாக்கும்

பெரும்சுவாசக் காற்றாக, 

உள்வாங்கி வெளியேறும் 

உயிர்நாடி மொழியாமோ!   

                                ப.சந்திரசேகரன்.     

2 comments:

  1. மொழிமயக்கம் எறும் குறையாது..அருமை...

    ReplyDelete
    Replies
    1. கவிஞரின் மொழியில் வாழ்த்துப்பெறுகையில், கவிதையின் மொழி சிறக்கும்.

      Delete