உடலோ மனமோ
உழைப்பது தினமும்?
கடலின் அலைகள்
எழுந்திடும் நேரம்,
உழைப்பது கடலோ
அலைகளின் அதிர்வோ?
தென்றலாய் புயலாய்
திரிந்திடும் காற்றில்
சுகமோ,வேகமோ
காற்றின் உழைப்பு?
மண்ணின் தரமோ
மறைந்திடும் உரமோ
வளர்ந்திடும் பயிரென
கிளர்ந்திடும் உழைப்பு?
விண்ணின் உழைப்பில்
சம பலம் காண்பது,
கதிரவன் கனலோ
நிலவதன் குளிரோ?
சமைத்திடும் தீயின்
உழைப்பே உணவெனில்,
எரித்திடும் நெருப்பினில்
கரிவதோ உழைப்பு?
பஞ்ச பூதங்கள்
தஞ்சம் புகுந்த
எண்ஜான் உடலில்,
அஞ்சா அறிவினால்
ஆற்றல் மிகுந்திட,
கடலின் அலையென
கடந்திடும் மனமே,
உடலை உந்துமாம்
உயர்த்திடும் உழைப்பாய்!
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment