கற்றைக் கற்றையாய் சேர்த்த பணத்தில்
கற்றதும்,கறந்ததும்,கசங்கிடும் காகிதம்;
மற்றவை பலவும்,மக்கிடும் பொருளாம்;
உற்றுச் சேர்த்த உண்டியல் உடைந்திட
சுற்றிச் சிதறிடும் காசுகள் போலவாம்,
வற்றி வெடித்திடும் ஆசைகள் எல்லாம்.
வெற்றிடம் ஒன்றே விளங்கா விடையாம்..
தோற்றமும் மறைவும் தேதிகள் கணக்கே!
நேற்றைய பாடம் இன்றைய பழங்கதை;
நூற்றுக் கணக்கில் நெரித்திடும் நிகழ்வினில்
மாற்றிடக் கூடுமோ மலையெனும் குறைகள்?
முற்றிய கதிர்களே,மண்ணைத் துறக்கும்.
உற்றதோர் உயிரோ,ஊனெனும் கதிரினை,
மற்றொரு நாளில் மண்ணுடன் சேர்க்கும்!
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment