Tuesday, October 19, 2021

உழைப்பு

உடலோ மனமோ 

உழைப்பது தினமும்? 

கடலின் அலைகள் 

எழுந்திடும் நேரம், 

உழைப்பது கடலோ 

அலைகளின் அதிர்வோ? 

தென்றலாய் புயலாய் 

திரிந்திடும் காற்றில் 

சுகமோ,வேகமோ 

காற்றின் உழைப்பு?

மண்ணின் தரமோ 

மறைந்திடும் உரமோ

வளர்ந்திடும் பயிரென 

கிளர்ந்திடும் உழைப்பு?

விண்ணின் உழைப்பில்

சம பலம் காண்பது, 

கதிரவன் கனலோ   

நிலவதன் குளிரோ? 

சமைத்திடும் தீயின் 

உழைப்பே உணவெனில், 

எரித்திடும் நெருப்பினில்

கரிவதோ  உழைப்பு? 

பஞ்ச பூதங்கள் 

தஞ்சம் புகுந்த 

எண்ஜான்   உடலில், 

அஞ்சா அறிவினால் 

ஆற்றல் மிகுந்திட, 

கடலின் அலையென

கடந்திடும் மனமே,

உடலை உந்துமாம் 

உயர்த்திடும் உழைப்பாய்!  

ப.சந்திரசேகரன்.

   

      

Tuesday, October 12, 2021

The Marriage Drama

Love need not be a prologue to marriage, 

Nor need marriage be an epilogue to Love.

If marriage is a monotonous monologue,

Either the husband or the wife who leads, 

Becomes the one side marital apologue.

In case marriage is a disputing dialogue, 

It excels in a show of mighty martial arts, 

Skilled in the use of words and utensils.

Asides and soliloquies,actually amplify

The unsaid and unheard airs of the mind.

Suppose the characters are more in number,

In laws invade,as nuisance integral parts,

Or intrigue characters of the marriage drama.

If man and wife are always Romeo and Juliet,

The drama of marriage is romantically well cast.

If,Othello and Lady Macbeth,it is staged aghast.

{Note:- apologue- a moral fable}

P. Chandrasekaran.


Wednesday, October 6, 2021

உண்டியல் உடைந்திட

கற்றைக் கற்றையாய் சேர்த்த பணத்தில் 

கற்தும்,கறந்தும்,கசங்கிடும் காகிதம்; 

மற்றவை பலவும்,மக்கிடும் பொருளாம்;

உற்றுச் சேர்த்த உண்டியல் உடைந்திட 

சுற்றிச் சிதறிடும் காசுகள் போலவாம், 

வற்றி வெடித்திடும் ஆசைகள்  எல்லாம்.

வெற்றிடம் ஒன்றே விளங்கா விடையாம்..


தோற்றமும் மறைவும் தேதிகள் கணக்கே! 

நேற்றைய பாடம் இன்றைய பழங்கதை; 

நூற்றுக் கணக்கில் நெரித்திடும் நிகழ்வினில்  

மாற்றிடக் கூடுமோ மலையெனும் குறைகள்? 

முற்றிய  கதிர்களே,மண்ணைத் துறக்கும்.

உற்றதோர் உயிரோ,ஊனெனும் கதிரினை, 

மற்றொரு நாளில் மண்ணுடன் சேர்க்கும்!   

ப.சந்திரசேகரன்.

 

    

  

Friday, October 1, 2021

The Mahatma myths


                  {For 2nd October,2021}


Gandhi became a Mahatma,even before
He was raised to the state of martyrdom,
By the bullets of a brazen,beastly hand.
History elucidates the elasticity of time.
The faster,the passing expansion of time,
The firmer it comes back to its usual spell.
As twelve months shrink into one year,
The past becomes a processed,tinned stuff.

New generation,media-made masterminds,
Keep playing a well designed popularity game.
They bake their half remembered past,
With their casually composed key board tunes,
That mesmerise the website borne mind mills. 
Revised lyrics of their newly scripted history,
Reverberate with racy rhythms everywhere,  
Delivering a remix of the Mahatma melodies.

Today Gandhi is present in portraits,statues
And in the half -willing currency notes,
But not in the minds of the new wave stalwarts.
They colourfully display some Gandhi myths 
With myriad new shades of the Gandhi times.
Their Gandhi myths being granules of gimmicks,
Are dissolved in the liquid smiles of the Mahatma,
That simply radiate the resilience of time's Truth.
P.Chandrasekaran.