Saturday, November 28, 2020

வெளிச்சம் தேடுவானேன்?



{"ஏற்றுக தீபம்;போற்றுக தீபம்;கார்த்திகை தீபம்".}

விளக்கேற்றி வைத்தபின் 

வெளிச்சம் தேடுவானேன்? 

முளைத்தது மண்மணத்தில், 

முந்தி வளரத்தானே? 

இளம்பிறை பௌர்ணமியாய் 

எழுந்தபின் எழிலுடன், 

இணைந்திடல் வான்வசமே! 

பளிங்குகள் கரைசேர 

பரவசம் பிறையாகும்.  

மிளிர்ந்திடும் பொழுதுகள் 

மகிழ்ச்சியின் தூவல்களே!

ஒளிந்திடும் ஓரைகள், 

ஒளிபெற, திரியேற்றும் .  

ஒளிதனில் உருவாகும், 

உணர்வுகள்  பலவாகும். 

உளிதனில் பிறந்திடும் 

சிலைகளின் ஒளியென, 

தெளிந்தநல் மனங்களின் 

தெவிட்டாச் சிந்தனைகள், 

குளங்களைத் தெளிவாக்கும் 

குவிந்ததோர் மீன்களாய், 

வெளிச்சம் வரையுமாம், 

விளைந்த விண்மீன்களாய்  ! 

ப.சந்திரசேகரன் .   

No comments:

Post a Comment