விழிகளின் விநோதமாய்,
மொழிகளின் நாதமாய்,
தொழில்களின் தோரணமாய்,
நாவின் நளினங்களாய்,
பாவின் விளக்கங்களாய்,
விரல்நுனியின் வித்தைகளாய்,
நிரலுரைக்கும் நிகழ்ச்சிகளாய்,
நிலமூன்றிய நல்வாழ்வின்,
பலர்போற்றும் செயலாகி,
கலியுகத்தில் கணினியுடன்,
பலமாக பணிதொழுது,
குலம்வாழ,குணம் காப்போம்!
உலகாளும் கலைவாணி,
உடனிருந்து ஒளிதருவாள்.
ப.சந்திரசேகரன் .
Arumai
ReplyDelete