விடியல் சொல்லுகிறது,
"இருளே புறப்படு!"
துளைத்ததோர் துயரத்தை
துரத்தி விரட்டிடவே,
வெளிச்சம் வாயிலை
பளிச்செனத் தட்டுகிறது.
வெயிலுக்கு நேரமாச்சு;
வயலும் வாழ்வும்,
இயலும் இசையும்,
செயலின் சிறப்பும்,
துயில் துறக்கும் நேரமிது.
இருளின் இடிதாங்கிய
இரவுகள் இறக்கையில்,
இனிமையின் பூபாளத்தை
வெளிச்சம் பிரசவிக்கும்.
விடியல் சொல்லுகிறது,
"இருளே புறப்படு!
வெளிச்சத்துடன் விளையாட
வெயிலுக்கு நேரமாச்சு!"
ப.சந்திரசேகரன் .
"வயலும்
ReplyDeleteதுயில் துறக்கும் நேரம்... " வயல் துயில் கொள்ள நேரிட்டால் பசியின் வெம்மையால் வயிறும் துயில் மறக்கும்.