Wednesday, February 26, 2020

ஒன்னுமே பண்ணாம,

ஒன்னுமே பண்ணாம,ஓடுதே காலம்;
ஏதாச்சும் செஞ்சா,யாரார்க்கோ  லாபம்.
உன்னையும் என்னையும் படச்சது எல்லாம்
ஊருக்கு உதவும் ஊழ்வினை தானே!
மண்ணிலே தானா மொளச்சது எல்லாம் 
மக்கியும் மண்ணுக்கே உரமா மாறும். 
எண்ணமும் செயலும் ஏணியா இருந்தா 
எத்தனை பேருக்கு ஏற்றங்கள் பெருகும்!

கண்ணிலே ததும்பும் கண்ணீர் துளியே 

கவலைகள் கரைக்கும் கடலலை யாகும்.  
திண்ணைகள் மறைந்திட திரண்ட ஊடகம் 
தெருவுகள் கடந்து திண்ணைகள் காணும்; 
அன்னை மடியென அடைக்கலம் தருதலே 
ஆனையின் பலத்துடன் ஆறுதல் அளிக்கும். 
தன்னையே மறந்து,துன்பம் துடைத்தலே, 
தாயின் கருவறை களிப்புறும் கதையாம் !

ப.சந்திரசேகரன் 

1 comment:

  1. தாய் களிப்புறுதல் சாதாரண ஒன்று
    அவள் கரு அறையே களிப்புரும் என்றது தான் சி classic one

    ReplyDelete