Wednesday, February 26, 2020

ஒன்னுமே பண்ணாம,

ஒன்னுமே பண்ணாம,ஓடுதே காலம்;
ஏதாச்சும் செஞ்சா,யாரார்க்கோ  லாபம்.
உன்னையும் என்னையும் படச்சது எல்லாம்
ஊருக்கு உதவும் ஊழ்வினை தானே!
மண்ணிலே தானா மொளச்சது எல்லாம் 
மக்கியும் மண்ணுக்கே உரமா மாறும். 
எண்ணமும் செயலும் ஏணியா இருந்தா 
எத்தனை பேருக்கு ஏற்றங்கள் பெருகும்!

கண்ணிலே ததும்பும் கண்ணீர் துளியே 

கவலைகள் கரைக்கும் கடலலை யாகும்.  
திண்ணைகள் மறைந்திட திரண்ட ஊடகம் 
தெருவுகள் கடந்து திண்ணைகள் காணும்; 
அன்னை மடியென அடைக்கலம் தருதலே 
ஆனையின் பலத்துடன் ஆறுதல் அளிக்கும். 
தன்னையே மறந்து,துன்பம் துடைத்தலே, 
தாயின் கருவறை களிப்புறும் கதையாம் !

ப.சந்திரசேகரன் 

Friday, February 21, 2020

Number Games

When number three arrives after one and two,
Is the influx an addition,or an intrusion to view?
However deeply bound in love,do one and two woo,
The third will surely bring one and two,on a queue.

Priority is a line,called one,two,three and so on;

When a child is born,a couple's routine is gone.
The next born,checkmates its senior as a pawn.
Every addition,is the story of a deletion drawn.

New numbers out date old ones,in markets'chart;

Multiplication of numbers,breaks addition's heart.
Boosting the value of figures is a graph to outsmart
The earlier numbers,by wrecking their robust start.

Who bothers if the numbers are odd,or divisively even?

The heat of a dish is between the utensil and the oven.
One wanting to play even with others,to shift the blame,
Fails to notice the in-between third,in the number game.
P. Chandrasekaran.

Monday, February 10, 2020

வம்பு

வம்புக்கு வர்ணமிகு கொம்புகள் கொண்டு,
கம்பீரக் காயங்கள் காட்டுதல் உண்டு. 
அம்பலப் டுத்தவே ஆழ்கிணறு தோண்டுபவர், 
நெம்பும்  நாவினால்,நாசூக்காய் நகலெடுப்பர். 
வெம்பியது பழமென்பர்;வேடங்கள் நிசமென்பர் . 
நம்பிக்கை நாற்றுநட,நடுத்தெருவில் உழுதிடுவர். 
கும்பிடும் கரங்களிலிலே குறும்பை குவித்திடுவர்.
செம்புக்கு சாயமிட்டு தங்கமெனத் தரம்பிரிப்பர்.  
கும்பலாய் அவர்கூட, குண்டூசி கோடரியாம்.  
கம்பியிலா தந்தியென கதைகள் கரைபுரள, 
அம்பெனத் தாக்குவதே,அவதூறுச் செய்திகள்.
கம்பனைக் கவிழ்த்திடவே கூத்தன் கோலூத  
அம்பிகா பதியின்  அருங்காதல் அழிந்ததே! 
தம்பியாய் தமயனாய் தாய்வழி நின்றோரை,
பம்பை உடுக்கையுடன் பகைத்திரியை ஏற்றி,  
கம்புகள் சுழற்றும் காளைகளாய் மாற்றலே, 
வம்புகள் புரிவோரின் வாடிக்கை நடப்பாம்! 
அம்பலின் அப்புகள்,அடுக்குமாடி ஆகுமாம்.
எம்பகை உம்பகை எரியூட்டில் எழும்பிடவே ,
சம்பவங்கள் சதிராட ,சர்ச்சைகளே சரடாம். 

குறிப்பு:- 
அம்பல்- அவதூறு வதந்திகள். 'calumny' in English
ப.சந்திரசேகரன் 



Monday, February 3, 2020

The Shift

                           I
We live in a world of shifting stints.
Some people have to work in shifts;
Some are used to shifting their works.
It is easier to shift the blame on others
Than blaming the protocols of shift.
Writers shift the script to suit the stars,
Or shift the stars,to suit the script.
When persons shift their priorities,
Priorities shift persons to different places.
Shifting places,call for shifting lifestyles.
When lifestyles shift,new routines set in;
Older ones shift fast,to past calendars.
Time shifts events into folders of history;
But people shift history into their times.
                            II
While people swiftly shift their loyalties
There is a talk about ideological shifts, 
Between corridors of religion and politics.
Shifting fits principles,into pockets of power;
Turncoats shift convenience into ideology,
Or ideology into convenience,without qualms;  
A break in wedlock calls for a shift because,
A shift in amity leads to a ballistic break.
Unless and until there falls a rigorous rift,
There is no room for a sudden marital shift.
Ageing shifts people,as patients to the wards.
Wards at last,shift their bodies to the morgues.
Life is a serial shift from the womb to the tomb,
With or without shrift,for many shifts to bloom. 
P. Chandrasekaran.
 {Note:- shrift-confession to a priest 
  or absolution by a priest}