Tuesday, April 11, 2017

நன்மை தரும் நாள்.14/04/2017



            நன்மை தரும்  நாள்.14/04/2017

          {இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்} 

போர்க்களம் பலவாம் பூமியில் இன்று;
யார்ப்பகை வெல்வது,  யாரறி வாரோ?
வேர்ப்பகை படர்ந்து, வாய்மை வற்றிட,
வார்ப்பது எதுவோ, வினையோ விதியோ ?

ஊர்ப்பகைக் களைந்து, ஒருமனம் ஊன்றி,  
தேரிழுப் போரின்  தெருவுகள் திளைக்கும்.
சீர்தரும் நாளில் சேர்ந்திடும் கரங்களால், 
சார்ந்திடும் சமூகம் சரித்திரம் படைக்கும்.

கூர்மதிக் குற்றம் துலக்கிடும்  அறிவினில்,
கார்முகில் ரகசியம் திரையென விலகும்;
நேரடிக் காட்சியாய் நிகழ்வுகள் கண்டிட,
சோர்விலாச் சுடரொளி, சுற்றிப் பரவிடும் .

தீர்த்திட இயலா, தீமையும் கொடுமையும்,
தீர்ப்பினில் கரைந்திட, தேய்பிறை யாகும்; 
பார்ப்பவை  பார்வையின் நன்மைக ளென்று,
ஈர்ப்புடன் இணைவோம், அகப்பகை வென்று.
                                                                  .சந்திரசேகரன்.

No comments:

Post a Comment