Friday, October 10, 2025

பச்சை மாமலை போல் மேனி


             (புரட்டாசி கடைசிச் சனியில்)

உச்சிமுதல் பாதம் வரை 

பச்சைமலை மேனிகொண்டு,

கச்சிதமாய் அழகுவைத்து 

மெச்சிடுவோர் கொஞ்சிடவும் 

துச்சமென நினைப்போரை

வச்சக்குறி வார்த்திடவும்,

குச்சியினை குழலாக்கி 

அச்சுதனாய் அறம்போற்றி,

மச்சாவதாரம் கண்ட

அச்சமில்லா  அனந்தனை,

பிச்சகப்பூ மாலையிட்டு,

இச்சகம் இயம்பாமல்,

மிச்சமின்றி வழிபடுவோம்.!

மெச்சிடும் மெய்ஞானம்

நிச்சயமாய் நெஞ்சினிலே,

அச்சிட்டு அகமகிழ்வோம்.!

ப.சந்திரசேகரன்.


1 comment:

  1. சக்தி வாய்ந்த ஶ்ரீ கிருஷ்ண காயத்ரி மந்திரம் *"ஓம் தேவகீநந்தனாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத்"*
    மந்திரத்தின் பொருள்: "தேவகியின் மகனாகிய கிருஷ்ணரை நாங்கள் தியானிக்கிறோம், வாசுதேவரின் சக்தியை நாங்கள் பெறுகிறோம், அதன் மூலம் ஶ்ரீ கிருஷ்ணர் எங்களை வழிநடத்தட்டும்"🪷🙏🏻

    ReplyDelete