Monday, June 2, 2025

கலைஞரின் வாசமிகு நினைவுகளில்,

முத்தமிழும் செம்மொழியும்,

கொத்துக் கொத்தாய் 

கொடிகளின்றிப் பூத்து,

சத்துமாவுச் சொற்களென

வித்தை பலபுரிந்து

வீறுநடை போட்டிடவே,

வித்திட்ட நாளிதுவாம்!

நித்தச் சூரியனின்

புத்தொளிப் பரவசத்தில்,

சத்தமிட்டுச் சொல்வோம் !

"திருக்குவளைத் திருநாளும்

திருக்குறளின் ஓவியமும்

திரட்டிய தீந்தமிழால்,

ஜூன் மூன்றில்,

தான் விரிந்து

வான் மிளிரும்,

வரலாற்றுக் கலைஞரின்,

வாசமிகு நினைவுகளில்!"

ப.சந்திரசேகரன்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மிகுதியும்
    பகுதியாகிறது.....
    தங்களை
    பாராட்டிய பின்
    சொற்களின் நிலை!!

    ReplyDelete