நல்லக் கண்ணு!
என்ன பொருத்தமாய்
வைததனர் உம் பெயரை.
நல்லதை மட்டுமே
பார்த்ததோர் கண்களின் ,
பார் போற்றும் பரிவு.
கம்யூனிசத்தின் கண்ணான,
நூற்றாண்டு நன்மயைின்
காற்றாடிக் குளிர்ச்சி.
எளிமயைின் விருட்சம் நீ!
துளிகூட தானில்லா
தளிர்வளரும் பொதுநலத்தின்,
களிப்பூட்டும் காணொளியே!
உலகத்தில் உம்போன்று
உயர்நத உள்ளங்கள்
ஒருசேர உலா வரின்,
நெடுஞ்சாலை பாதையெங்கும்
நல்லதே நாடுயர்த்தும்.
ஊராண்ட பலரும்
நூறாண்டு வாழ்ந்த உம்மை,
தேரனெவே சுற்றிடுவர்.
நீர்வாழ்ந்த காலத்தில்
யார்வாழ்ந் திருந்தாலும்,
நல்லதோர் நூற்றாண்டின்
நலமெல்லாம் பெற்றிருப்பர்.
நல்லக்கண்ணு எனும்
நான்மணிக்கடிகை தன்னை,
சொல்லாப் பெருமையுடன்
சொல்லுயர்த்தி சிரம்தாழ்த்தி,
வல்லுயிராய் வணங்குகிறேன்.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment