இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பந்தின் வீச்சில் பாய்ந்திடும் வேகம்,
உந்தும் விசையின்,உடல்பலக் கூற்றே!
உலகம் விரிதல் உள்ளக் குதூகலம்;
கலகம் அகன்றிட, காரியம் வெல்லும்.
என்றும் மானுடம் ஒன்றெனும் உணர்வை,
ஒன்றெனும் ஆளுமை ஓங்கித் தாக்குமாம்!
புதுமைகள் புரிதல் பூசலின் விதையெனில்,
சதியின் வலையில் சிக்கிடும் புதுமைகள்!
நன்மைக் கரங்களின் நாடித் துடிப்பினை,
வன்மை விலக்கி வாழ்வுறச் செய்வோம்!
கண்ணிய விழிகளே கடவுளைக் காணும்,
புண்ணியம் கூடுதல், புகலிடம் புகுத்தலே!
இன்னலும் ஈட்டலும் எதிர்மறை ஆகுமோ,
தன்னுடன் பிறரை சேர்த்துப் பகிர்ந்திடின்?.
மண்ணில் மதத்துடன், மனிதம் மலர்ந்து,
விண்வரை வீசட்டும், வாசம் புத்தாண்டில்!
ப.சந்திரசேகரன்.