பிடிப்பிடி.
அதிகம் பேசுகிறான்
அவனைப் பிடி.
பிடிப்பிடி
விலகிப் போகிறான்,
விரட்டிப் பிடி.
பிடிப்பிடி.
எதிர்த்துப் பேசுகிறான்;
எட்டிப் பிடி.
பிடிப்பிடி.
கேள்வி கேட்கிறான்
கழுத்தைப் பிடி.
நழுவறவனை விட்டுப் பிடி.
நம்பாதவனை நெறுக்கிப் பிடி.
பிடித்தவனை கட்டிப் பிடி.
பிடிக்காதவனை வளைத்துப் பிடி.
சீறுகின்றவனை சிறையில் பிடி.
மதம் பிடித்தவனை
மாண்புறப் பிடி.
நிதம் எதிர்ப்பவனை
நாண்டிடப் பிடி.
பிடிப்பது நல்லொரு
படிப்பினையாம்.
படிப்பினை மட்டுமே
படர்ந்திடுமாம்.
படர்ந்திடும்
அதிகாரச் சாட்டையிலே
படியாத படைகள்
படுத்திடுமாம்.
ஆட்டுவித்தால் யாரொருவர்
ஆடாதாரோ இங்கே!
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment