எனக்கென நீயும்,
உனக்கென நானும்!
இடையே இருப்பது
இரும்பினை வெல்லும்
இறுகிய பாலம் .
உனக்கென நானும்!
இடையே இருப்பது
இரும்பினை வெல்லும்
இறுகிய பாலம் .
யாருடன் யாரோ,
இன்றைக்கு இங்கே !
எவருடன் எவரும்,
இணையலாம் என்பது,
இயற்கையே கூசிடும்,
இருட்டறைக் காட்சியே.
நடுக்கடல் அறியுமோ
கரையலை வேகம்?
கரைதொடும் அலைகள்
கனவினிலும் காணுமோ
நடுக்கடல் ஆழம்?
புணர்தல் விதிகளை
புதிர்களாய் மாற்றி,
நிலவுடன் இணையா
மேகங்கள் போன்று,
குலவிடும் மாயையில்
குழைந்திடும் இணைவுகள்.
நீயும் நானும்
மேகங்கள் போன்று,
குலவிடும் மாயையில்
குழைந்திடும் இணைவுகள்.
நீயும் நானும்
தூய்மைத் திரையினுள்
வாழ்ந்திடும் வாழ்க்கை,
தேய்பிறைக் காணா,
திருவிழாக் கோலமே!
வாழ்ந்திடும் வாழ்க்கை,
தேய்பிறைக் காணா,
திருவிழாக் கோலமே!
ப.சந்திரசேகரன்.
...... *இறுகிய பாலம், இளகிய கோலம், இந்திர ஜாலம், மன்மத பாணம்.*
ReplyDelete