Sunday, March 31, 2024

பிடிப் பிடி

 பிடிப்பிடி.

அதிகம் பேசுகிறான்

அவனைப் பிடி.

பிடிப்பிடி

விலகிப் போகிறான்,

விரட்டிப் பிடி.

பிடிப்பிடி.

எதிர்த்துப் பேசுகிறான்;

எட்டிப் பிடி.

பிடிப்பிடி.

கேள்வி கேட்கிறான்

கழுத்தைப் பிடி.

நழுவறவனை விட்டுப் பிடி.

நம்பாதவனை நெறுக்கிப் பிடி.

பிடித்தவனை கட்டிப் பிடி.

பிடிக்காதவனை வளைத்துப் பிடி.

சீறுகின்றவனை சிறையில் பிடி.

மதம் பிடித்தவனை

மாண்புறப் பிடி.

நிதம் எதிர்ப்பவனை

நாண்டிடப் பிடி.

பிடிப்பது நல்லொரு 

படிப்பினையாம்.

படிப்பினை மட்டுமே 

படர்ந்திடுமாம்.

படர்ந்திடும் 

அதிகாரச் சாட்டையிலே

படியாத படைகள் 

படுத்திடுமாம்.

ஆட்டுவித்தால் யாரொருவர்

ஆடாதாரோ இங்கே!

                          ப.சந்திரசேகரன்.



Friday, March 22, 2024

கணவனும் மனைவியும்.

எனக்கென நீயும், 
உனக்கென நானும்! 
இடையே இருப்பது 
இரும்பினை வெல்லும் 
இறுகிய பாலம் 

யாருடன் யாரோ, 
இன்றைக்கு இங்கே !
எவருடன் எவரும், 
இணையலாம் என்பது, 
இயற்கையே கூசிடும், 
இருட்டறைக் காட்சியே. 

நடுக்கடல் அறியுமோ 
கரையலை வேகம்? 
கரைதொடும் அலைகள் 
கனவினிலும் காணுமோ 
நடுக்கடல் ஆழம்? 

புணர்தல் விதிகளை 
புதிர்களாய் மாற்றி,
நிலவுடன் இணையா 
மேகங்கள் போன்று, 
குலவிடும் மாயையில் 
குழைந்திடும் இணைவுகள்.

நீயும் நானும்
தூய்மைத் திரையினுள் 
வாழ்ந்திடும் வாழ்க்கை, 
தேய்பிறைக் காணா, 
திருவிழாக் கோலமே! 

ப.சந்திரசேகரன்.

Thursday, March 7, 2024

Life's radiance { Happy women's day}

A woman is called so,due to her ambition

To consistently woo, man's many a mission.

She might stand beside man or against him,

But her presence makes man shed his whim.

She walks steps that man quite often shuns;

She takes a big lead,through her racy runs. 

She can tick problems and troubleshoot them,

By trimming her roles and goals,to glow as gem.


As the dawning sun or as the gliding,crescent moon,

A woman could throw light,day and night,as a boon.

As a mellowed mother and as a power wielding wife,

She sternly relieves her familyfrom any daily strife.

Whether she works at home,from home,or anywhere,

A woman's mind and spirit transmits,a radiance rare. 

P.Chandrasekaran.