Tuesday, February 13, 2024

சித்தாந்தங்களைத் தாக்கும் சிந்தனைச் சீரழிவுகள்.

 

   "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம்" என்றார் கவிஞர் கண்ணதாசன். சித்தாந்த மாக இருந்ததாலும் வேதாந்தமாக இருந் தாலும்,அவைகள் தனிமனிதனுள் தொடங்கி,சமூகத்தில் சங்கமிக்கின்றன . இருப்பினும்,வேதாந்தாம் என்பது,ஆழ்ந்த கருத்தியல்களை உள்வாங்கி,எல்லோ ராலும் புரிந்துக்கொள்ளமுடியாத பாதை யில் பயணிப்பதால்,அது தனித் தன்மை வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், சித்தாந்தம் பெரும்பாலும் விரிந்த சமூகத்தை உள்ளடக்கியே,ஊடுருவுகிறது. 

   சித்தாந்தங்கள் முழுவீச்சில் மனித இனத்தை ஆக்கிரமித்து ஆளுமை புரிவதே,அரசியல்.அரசியலில்,பல்வேறு சித்தாந்தங்களில் சிலவற்றை முன்னிறுத் தியோ,அல்லது பலவற்றை உள்ளடக்கியோ பல்வேறு அமைப்புகள் தனித்தோ அல்லது கூடியோ,ஆளுமை புரிகின்றன.தனிநபர் உரிமை மற்றும் உடமைப் பாதுகாப்பு,கல்வி, மருத்துவம்,வேலை வாய்ப்பு,மற்றும் சமூக நல்லிணக்கம் போன்ற பல்வேறு வாழ்வி யல் நடைமுறைகளை  உறுதி செய்யும் வகையில்,தனியுடைமை,மதவாதம்,சர்வா திகாரம்,என்றும்,அல்லது,பொதுவுடமை, பன்மத அரவணைப்பு,சுயமரியாதை போன்ற பல்வேறு சித்தாந்தங்களை மைய் யப்படுத்தி,தனித்தும் அல்லது இரு மூன் றில் ஒருமூன்றை ஒருநிலைப்படுத்தியும், அரசியல் சதுரங்கக்களம் அமைக்கப்படுகி றது.

   மேற்கண்ட இரு மூன்று சித்தாந்தங்கள் ஏறுமாறாய் ஒன்றுக்கொன்று எதிராய் ஆட்சிப்பரிவாரம் அமைக்கையில்,அதனால் அவற்றுக்கிடையே ஏற்படக்கூடிய சித்தாந்த மோதல்கள்,சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாகும். இதைத்தான் இன்று இந்தியாவில் பல மாநிலங்கள் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. 

  மக்களாட்சி என்பது உறுதியாக,எல்லார்க் கும் எல்லாம் என்பதன் கருவுருவே! எல்லார்க்கும் எல்லாம் என்பதில்,பொது வுடைமையும்,தனிநபர் கண்ணியமும்,மதப் பாதுகாப்பும்,தெள்ளத்தெளிவாக எல்லோ ராலும் உணரப்படவேடும்.இதில் 'நான்' 'எனது' போன்ற ஒற்றைச் சிந்தனைக்கு இடமே இல்லை.

 ஒரு நாட்டின் அரசியலமைப்புச்சட்டத்தில் மக்களாட்சிக்கோட்பாடுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கும் சூழலில்,எந்த ஒரு தனி நபரும்,அவர் எப்படிப்பட்ட அதிகாரத்தில் இருந்தாலும்,அரசியல் சாசனத்தை எந்த வகையிலும் மீறும் தார்மீக உரிமை,அவருக்கு இல்லை.ஒரு தனி மனிதரின் மாற்றுச் சிந்தனைக் கோட்பாடோ,அம் மாற்றுச்சிந்தனையால் அவர் தன் கடமையை தன் விருப்பம்போல் ஆற்றும் சிந்தனைச் சீரழிவோ,சித்தாந்தங் களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை சின்னாபின்னப்படுத்தி, கேள்விக்குரியாக்கக்கூடும்.

  கூட்டாட்சி சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மக்களாட்சி நடைமுறை யில்,சர்வாதிகாரத்தை சிரசில் ஏற்றும் சிந்தனைச் சீரழிவிற்கு,ஒருபோதும் இடமில்லை.எந்த நாட்டில் மக்களாட்சிச் சித்தாந்தங்கள் தேர்தலுக்கு மட்டும் பின் பற்றப்பட்டு பின்னர் புறக்கணிக்கப்படு கிறதோ,அந்த நாடு சித்தாந்த மீறல்களின் சறுக்கல்களையும்,மக்களின் மலையளவு எதிர்ப்புகளையும்,நிச்சயமாக சந்திக்க வேண்டிவரும்.இந்த சித்தாந்த சறுக்கல்கள் ஊழலையும் உள்ளடக்கியவை என்பது சமகால நிகழ்வுகள் கோடிட்டுக் காட்டும் சத்தியமாகும்.சிந்தனைச் சீரழிவால் ஏற் படும் சித்தாந்த குழப்பங்கள்,சமூதாயத்தை பிளவுபடுத்தி,சர்வநாசத்திற்கு வழி வகுக்கும்.

              =============0==============

1 comment:


  1. படித்தேன்..சுவைத்தேன்.. விவரிக்க, விமர்சிக்க முயலும் என் நிலை,...கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் நிலைதான்.

    ReplyDelete