உப்புக்கு யாத்திரை
தப்புகள் எதிர்த்தது.
செப்பியதோர் யாத்திரை
இப்போதய தவறுகள்
எடுத்து முன்வைத்தது.
ஒப்புக்கு யாத்திரை
ஊர்போய் சேருமோ?
காந்தியின் பெயரின்
காந்தம் ஒருவரலாறு.
வரலாற்று விதைகள்
யாத்திரைப் பாதையை
வார்த்து வடிவமைக்கும்.
வெறுப்பினை வேரூன்றி
புறப்படும் யாத்திரை,
புதர்களில் பயணிக்கும்
அரவத்தின் கரவொலியே.
அகத்தில் அன்பேற்றி
அலைபாயும் யாத்திரையை
யுகங்கள் நினைவாக்கும்.
முகத்தில் கனலேற்றி
மூச்சினை நச்சாக்கி
முனைந்திடும் யாத்திரை
மூர்க்கமாய் முறைசிதைக்கும்.
யாத்திரை எளிதாம்
பாதங்கள் பறைசாற்ற!.
ஆத்திரம் வெல்லுமோ
ஆசைகள் உள்ளடக்கி?
யாத்திரை பதிவுகள்
இயந்திரக் கனவின்
பூத்திடா நகல்கள்.
ப.சந்திரசேகரன்
"...அகத்தில் அன்பேற்றி
ReplyDeleteஅலைபாயும் யாத்திரையை
யுகங்கள் நினைவாக்கும்...." அடுத்தவனை அழித்திட புறப்படும் யாத்திரை எண்ணிக்கையில் ஒன்றைச் சேர்க்கும்
சிறப்பு சார்
ReplyDelete