நூறுவகை காதல் கண்ட
நூற்றாண்டுத் தலைமைக்கு,
தமிழ்மீது காதல்வர
தரணியே திளைத்தது.
முத்தமிழின் முகப்புகளும்
முறுக்கேறி முந்தியது.
தமிழ்மண்ணில் காதல்வர,
தமிழ்நாடே செழித்தது.
மகளிரின் மாண்புதன்னை
மனசார அரவணைக்க,
மகளிர்தம் முன்னேற்றம்
மாசற்று மலர்ந்தது.
திருநங்கை பெயர்முளைக்க
பாலினம் பலெவல்லாம்
பண்பறைக்குள் படர்ந்தது.
சமத்துவத்தில் காதலால்
சமூகம் ஒன்றிணைய
சமத்துவபுரம் ஈன்றது.
உழவர்கள் தோளிணைந்து
ஏரிழுக்கும் காதலால்
உழவர்தம் சந்தைகள்
ஊரெல்லாம் பெருகியது.
கல்வியின்பால் காதலால்
சூரிய வெளிச்சமென
சுடர்விட்டுப் பள்ளிகள்,
தேரெனச் சுற்றிநின்று
பூரிப்பைக் புகுத்தியது.
பழுத்ததோர் எழுதுகோலை
பரவசமாய்க் காதலிக்க
எழுத்துக்கள் அனைத்துமே
அழுத்தமாய் காவியங்கள்
ஆர்ப்பரிக்கப் படைத்தது..
வள்ளுவனைக் காதலிக்க
வாழ்வின் முப்பாலும்
தப்பாமல் பொருள்விளக்கி
தனிச்சவை தந்தது.
சகோதரம் காதலிக்க,
சமத்துவத்தை,சுதந்திரத்தை,
இமையிரண்டாய் களமிறக்கி
கூட்டணியாய் அரசியலில்,
கோபுரம் கட்டியது.
நூறுவகை காதல்கண்ட
நூற்றாண்டுத் தலைமையினை,
காற்றனெ சுவாசிக்க
காத்திருப்பர் காலமெல்லாம்,
ஆற்றுப் பெருக்கெடுத்த
ஆற்றல்மிகு மனிதரெல்லாம்!.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment