Friday, May 26, 2023

அட்டைக் கத்திகளும் ஆகாசப்புளுகுகளும்

புதிய கட்டிடமொன்று

பரணியில் பழைய ஓலைகளை

பரபரப்பாய்த் தேடுகிறது.

பிட்டுக் கதைகளை இட்டுக் கட்டி

அட்டைக் கத்திகளின்

ஆகாசப் புளுகுகளை

ஆளுக்கொரு வாயில்

அவசர அவசரமாய்த் திணிக்கிறது.

பாரம்பரியப் பெருமை கொண்ட

பழைய கட்டிடத்தின் 

ஊருணி உறைந்திருக்க

பாராளுமன்றம் இங்கே

'பார்' ஆளும் மன்றமென

அசைபோடும் வாய்கள்

பொய்ப்பசைத் தடவி 

புதுச்செய்தி அனுப்புகிறது.

சங்குகள் பலமுழங்க

செங்கோல் வருகையிலே,

எந்தமடம் எடுத்துவர,

எனும்குழப்பக் குரல்களில்

சரித்திரச் சான்றுகளும்

சாசன நடைமுறையும்

சமூகக் கடமைகளும்

சரிவைக் காணுகின்றன.

பிரம்மாண்டப் புதுமையில்

வரலாற்றின் பிரம்மாண்டம்

வாய்க்கரிசி தேடுகிறது.

ப.சந்திரசேகரன்.








No comments:

Post a Comment