தலையில் வகிடெடுக்கவும்
தரையில் கோலமிடவும்,
பிரிக்கவும் பறிக்கவும்
பரவலாய்க் கோடுகள்.
பாகம்பிரி கோடுகள்
பாவத்தின் பாடுகள் .
முதுமையின் கோடுகள்
முகத்தின் முறிவுகள்.
சாலையில் கோடுகள்,
பயண வழிகாட்டிகள்;
வெளிச்சத்தின் கோடுகள்,
விடியலின் வித்துக்கள்.
விடைத்தாள் கோடுகள்
தொடங்கவும்,திருத்தவும்.
வயலின் வரப்புகள்,
விளைச்சலின் விறைப்புகள்.
எல்லைக் கோடுகள்,
தொல்லைக் கோடுகள்.
நரித்தனக் கோடுகள்
நாசத்தின் ஏடுகள்.
குறிக்கோள் கோடுகள்
குறைத்திடும் கேடுகள்.
கோடிட்டு வாழ்வதற்கு
குறிக்கோள்,கோடாமோ?
இலட்சுமணன் கோடு
சீதை தாண்டிடவோ?
தாண்டிடும் வேளையில்
தீண்டுவது கேடாமோ?
ப.சந்திரசேகரன்.