வலிமையோ வலியோ,
வலைத்தளம் செல்வது ?
மீன்கள் சிக்கவோ,
மான்கள் மாட்டவோ?
மதில்கள் கடக்கவோ,
மதியினை மீறவோ?
கருத்துக்கள் கூறலாம்;
கரித்துகள் ஆகா,
கருத்துக்கள் தரித்து.
பிழைகள் கூறலாம்,
உரிமை மீறா,
உரிமை ஏற்றபின்.
சொற்பிழை கூறவும்
சொல்லிடத் தேவை,
உரிமை மீறா
உரிய நாகரீகம்.
வரம்பினை மீறி
வம்புகள் செய்திட,
வலைத்தளம் என்பது
வலித்தளம் ஆகும்,
நட்புகள் நாடும்,
நல்லதைத் தேடும்
வலிமைத் தளத்தில்,
நமட்டல் சொல்லால்
உரிமைகள் மீறி
பிழைகள் பீற்றிடின்,
குமட்டலில் குறுகும்,
வலியுடன் வலைத்தளம்.
ப.சந்திரசேகரன்.
No comments:
Post a Comment