மரமேறும் மனசுக்கு,
கிளையெல்லாம் மவுசு;
கிளைதவறி விழும்போது,
மண்ணொன்றே மவுசு.
அழகொன்றே மவுசுன்னா,
ஆற்றலெல்லாம் தரிசு;
தொழக்கூடும் தெய்வத்தையும்
துரத்தும் பொய்த்தவசு.
பணம்தடித்துப் பெருகையிலே ,
படைபலமே மவுசு;
பாசத்தை பாடைகட்ட
பரலோகம் பரிசு.
ஊழல் பெரும் மவுசாக,
உல்லாசம் சொகுசு.
பாழடைஞ்ச நேர்மையினை
பாரமென பறைசாற்றி,
பத்தமடைப் பாயினிலே,
பக்குவமாய் வீசு.
தொற்றுநோய் தொடர்ந்துவர,
தடுப்பூசிக்கு மவுசு.
கற்றெடுத்த மருந்துக்கு
'டெஸ்ட்' செய்ய,
கிட்டும் உடல் மவுசு.
குற்றத்தின் மவுசினிலே,
மனசுக்கில்லை கூசு;
பற்றற துறவிக்கோ,
மவுசெல்லாம் தூசு!
ப.சந்திரசேகரன் .
No comments:
Post a Comment