தரையில் உயிர்களின்
தக்கத்திமித் தாளம்;
தடுப்பூசி வந்துவிட்டால்
வெடுக்கென வீழும்,
தொற்றுநோய் வேதாளம்.
பொக்கைவாய்க் குழந்தையென,
புத்தாண்டு பிறக்கட்டும்.
பக்கமாய் பாசத்துடன்
பழகிட வருவோரை,
தூரத்தில் வைக்காது,
அக்கறையாய்க் கைகுலுக்கி
அடிமனசை குளிரவைப்போம்.
பக்குவமாய்க் கைகழுவும்
பாடம்படி பழக்கத்தால்,
கைசுத்தம் என்றென்றும்
மெய்ச்சுதம் ஆகட்டும்.
சமூகத் தூரத்தை
சத்தமின்றி துரத்தி,
அமோகப் பரிவுடன்
அன்பு படைப்போர்க்கு,
ஆரத்தி எடுப்போம்.
கலையட்டும் முகக்கவசம்!
முகம்மகிழும் காட்சியினை,
அகமகிழ்ச்சி ஆளட்டும்!
கனிவுடன் முழுமுகத்தை,
புத்தாண்டாய் வரவேற்போம்!
ப.சந்திரசேகரன் .
Yes. Let us forget the tougher days. We shall welcome the new year with cheers.
ReplyDelete