அழுத கண்ணீர்,அரசாணை அகற்றுமோடி?
தொழுத தெய்வம்,துணையாக நிற்குமோடி?
உழுத நிலம்,விளைந்த பயிர் விற்குமோடி?
மழையடிக்க,மடிந்த பயிர் துளிர்க்குமோடி?
பழுதடைந்த வண்டி ரோட்டில் ஓடுமோடி?
விழுது வந்து வேரதனைத் தாங்குமோடி?
எழுதிவைத்த இறைவன் விதி மாறுமோடி?
கழுதைப் பொதி கழுதையது அறியுமோடி?
செழித்தவர்க்கு சிறியோர்க் குரல் கேட்குமோடி?
அழுத்த மின்றி அநீதியென்றும் அடங்குமோடி?
முழம் போட வெறுங்கையால் முடியுமோடி ?
முழி பிதுங்கும் வேளையிது தெரியுமோடி?
எழுச்சியினை இரும்புக் கரம் இறுக்குமோடி?
பிழைச் சட்டம் என்பதெனில் பிழைக்குமோடி?
ப.சந்திரசேகரன் .
Beautiful and meaningful poem.
ReplyDeleteEllam modi. But he may not understand.
ReplyDelete