.
இன்றைய இந்து ஆங்கில நாளிதழில் T.M கிருஷ்ணா அவர்களின்"Keeping the cow and brahmin apart" என்ற வித்தியாசமான கட்டுரை படித்தேன். பசுவதைச் சட்டமும், பசுவதைக்கெதிரான இந்துமத குரலோசையும், கடந்த சில ஆண்டுகளாக நாம் அறிந்த ஒன்றே! ஆனால் இக்கட்டுரையில் அர்த்தமுள்ள முரண்பாடுகள் குறிப்பிடப்பட் டுள்ளன. பசுவின் புனிதத் தன்மை பேணும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மிருதங்க மேதை பாலக்காடு மணி அய்யர் அவர்கள், தரமான மிருதங் கங்களை ஆய்வு செய்து வாங்குவாராம். ஒருமுறை மிருதங்க தோலுக்கான விலை பேசுகையில் மிருதங்க உற்பத்தி செய்யும் வணிகத்தைக் சேர்ந்த நபர் ஒருவர், உயிரோடு ஒரு பசுவினை கொண்டுவந்து நிறுத்தி, அப்பசுவின் தோலுக் கான விலை ரூபாய் நூற்று இருபது என்றும் கூற, திரு மணி அய்யரும் அவ்விலைக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் முரண்பாடுகள் என்னவெனில், பசுவதையை எதிர்ப்பவர்கள், பசுத் தோலில் உருவாக்கப்படும் இசைக்கருவிகளை,அவர்கள் இசையெனும் பெயரில் பயன்படுத்த நேரிடுகிறது என்பதும், வேறு சாதியினர் தங்கள் கால்களுக்கு இடையே வைத்து,பசு,எருமை,மற்றும் ஆட்டுத் தோல்களினால் செய்யும் இசைக் கருவிகள், பூஜையறையில் வைக்கப் படுகின்றன என்பதாகும்.
மேலும், இவ்விஷயம் குறித்து பாலக்காடு மணி அய்யர் திரு இராஜகோபாலாச் சாரியை அணுகி இக்கட்டான தனது சந்தேகத்திற்கு விளக்கம் கேட்கையில் இராஜாஜி அவர்கள், எல்லாவற்றிர்க்கும் ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது என்று சொன்னதாகவும் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட் டுள்ளது. இக்கட்டுரையைப் படிக்கையில், முரண் பாடுகளின் பக்கங்கள் நிறைந்ததே வாழ்வியல் புத்தகம் என்பது மீண்டும் தெளிவாகியது. கண்ணப்பனார் கதையை மனதில் கொண்டு, இந்து மதத்தை பார்த்தால் மட்டுமே, தோளில் அன்பைத் தாங்குவதே சிவமென்றும் தோளில் பகையேறிட நாம் சவம் என்றும் புரியும்!..
ப.சந்திரசேகரன்