Friday, May 26, 2017

சொல்தோழா .

ஆம் தோழா!
 மதம் நமக்கு வேண்டாம் அதைப்பற்றி பேசினால் நமக்கே மதம் பிடிக்கும். 
அரசியல் வேண்டாம் அதைப்பற்றி விவாதிக்க ஆழ்மனம் அருவருக்கும்.. இங்கே உனக்கும் எனக்கும் பிடித்த உணவை புசிக்கக்கூட வழியில்லை. எண்ணங்கள் எழுத்தாகவோ வாய்வழி ஓலிவடிவமோ பெறாத நிலையில், அவைகள் மனமெனும் புதைகுழியில் புதைக்கப்படுகின்றன..
நினைத்ததைப் பேசுவதற்கு நிதானம் மட்டுமிருந்தால் போதாது; 
நிஜங்கள் அவதாரம் எடுப்பதற்கு நியாயமே நிலைப்படி.
வனவாசம் சென்றுவிட்ட வாய்மையை மீட்டுவருவது யார்?
பொய் அரிசியால் பொங்கல் வைப்பது இன்னும் எத்தனை நாளோ? நச்சுப்புன்னகைக்கும் நரியாட்ட லீலைகளுக்கும் வாய்க்கரிசி எப்போதோ? சொல்தோழா .

                                                                                              ப.சந்திரசேகரன்.        

No comments:

Post a Comment