சொல் தோழா!
நம்மில் பலரிங்கே ஆடுகளும் மாடுகளும் தானே!
நம்மைச் சுற்றி நாம் காணும்,
நம்மை அதிரவைக்கும், அயரவைக்கும்,
வனவிலங்கு சக்திகள்,
நம் நாடித்துடிப்பையும் இதயத்துடிப்பையும்,
அவ்வப்போது தடுத்து நிறுத்துவதை நீ உணரவில்லையா?
அன்றாடம் எத்தனை முதலைகள்,
திமிங்கலங்கள், ஓநாய்கள்,
நம்மை வேட்டையாடி வருகின்றன.
இங்கே பசுவுக்கும் எருமைக்கும் குரல் கொடுப்போர்,
ஏன் உரத்த குரலில் நமக்காக,
நம்மைக்காப்பாற்ற, பேசுவதில்லை?
மனிதத்தை மூழ்கடித்து நரபலிகொடுத்து,
ஆலயங்களில் தெய்வத்தை தேடுவதால்
என்ன பயன் சொல் தோழா?
ப.சந்திரசேகரன்.