Thursday, December 29, 2016

என்றும் இனிய இரண்டாயிரத்து பதினேழு. { 2017}

                 

என்றும் இனிய இரண்டாயிரத்து பதினேழு. { 2017}
================================================
விண்ணைத் தொடுவோம்!
எண்ணிய எண்ணம், ஏற்றம் காணுதல்,
புண்ணிய மனைத்தும், புதுவழி காணலே;
மண்ணில் அனைத்தும், மகத்துவம் பெறுதல்,
கண்ணியம் கொண்டு, காரியம் ஆற்றலே; 
தண்ணீர் தழைத்து, தவப்பயன் தருதல்,
கண்ணீர் கரைத்து, களங்கம் அகற்றலே;
உண்ணும் உணவில், உழைப்பை உணருதல்,
விண்ணென உயரும், வீரியம் விளங்கலே;
வண்ணக் கனவுகள் வளமுடன் நாடி,
திண்ணமாய்ப் பெறுவோம், நன்மைகள் கோடி.
                                                                   .சந்திரசேகரன்.

No comments:

Post a Comment