Thursday, September 8, 2016

மாயா!

மாயா!
மூளையும் மனதும் எதிரெதிர் அணியோ
வேளை வருகையில், வெல்வது மனமோ
ஆளுமை  ஆக்கம் அகம்புறம் அறிந்து,
நீளும் கடமைகள் நடத்திடும் அறிவோ?
தோளில் பொறுப்புகள் தாங்கிடும் போதும்
நாளும் பொழுதும் நெகிழ்ந்திடும் மனமோ?
மீளாத துயரிலும் மாண்புறும் அறிவும்
மூளும் போரிலும், மிதமுறும் மனமும்
வாளினில் கூரோ வாழ்வின் ஒளியோ
தாளிலும் நாவிலும் தழைப்பது எதுவோ ?
சூளையில் கல்லாய் அறிவோ மனமோ
சோளமும் சோறும் சுவைப்போர் மாட்டே!
                          ப.சந்திரசேகரன்..
         

No comments:

Post a Comment