Saturday, April 30, 2016

மேன்மை தரும் மேதினம் .





மேன்மை தரும் மேதினம்!

சாதிகள் இரண்டு .
ஆண்மையும் பெண்மையும்! .
உழைப்பது இரண்டு .
அறிவும், ஆற்றலும் .
மூளையின் முழுமை அறிவென்றாலும்
வேளைகள் பிறப்பது ஆற்றலின் தெறியே.
உடலும் உள்ளமும் உதிர்த்திடும் ஆற்றலே
கடலெனப் பரந்து உழைப்பலை ஆக்கும்.
எழும்பிடும் அலைகள் எட்டிடும் கரையே
இலக்குகளாகி இமயம் படைக்கும்.
வளர்ச்சி களின்றி வரலாறு உண்டோ
தளர்ச்சியில் வீழ்ந்தபின் தகைமை தங்குமோ.  
உழைப்போ ரின்றி உலகது உய்யுமோ!.
தழைப்பதே  தாரக மந்திரமென் றாக்கி
தரணியில் தரித்திரம் அகற்றும் கரங்களை
அரண்எனப்  போற்றி, ஆற்றல் தொழுவோம் .
                                                                        ப. சந்திரசேகரன் .                               

No comments:

Post a Comment