Tuesday, April 12, 2016

சீர்தரும் சித்திரைத் திருநாள். .




                                            சீர்தரும் சித்திரைத் திருநாள் .

உத்தமப் பார்வை உள்ளிரு ளகற்றிட  
சித்திரை வந்தது சிறப்புகள் சேர்த்து .
நித்தமும் நெறியுடன் வாழ்வோர் என்றும்
முத்துக் குளிப்பது முகரிமை சேர்க்கவே.

வித்தைகள் வலம்வரும் வசீகர வாழ்வில்
அத்து மீறிடும் ஆட்டங்க ளனைத்தும்  
சித்துவிளை யாட்டாய்  சித்தம் கலக்கிட .
மொத்தமாய்க் குளிப்பர் கானல் நீரினில்!.

நித்திரை கலைந்ததும் நிழலது விலகி
ஒத்திகை யில்லா உண்மை அரங்கில்,
பித்தம் போக்கிட  பிறக்கும் சித்திரை,
சத்தமாய் சத்தியம் சிந்தையில்  நிறுத்தி!.

அத்தரு ணத்தில் அறத்தேர் இழுத்து
அத்தாட்சி யோடு ஆற்றல் பெறுவோம் .!  
                                                                                ப. சந்திரசேகரன் .                                  

No comments:

Post a Comment