இனிய கிறிஸ்துமஸ் திருநாள் .
=================================
மெழுகென உருகி ஒளியெனப் பரவு ;
எழுத்திலும் பேச்சிலும் பளிச்சிடும் எண்ணம்
உழுத நல்உள்ளம், ஊட்டிய உயர்வே .
பொழுதெலாம் பேணும் அன்பின் அணுக்கள்,
முழுதும் தகர்க்குமாம் முறையிலா வன்மம்.
கழுகதன் பார்வையில், காலமும் இரையே.
பழியின் பக்கங்கள் பல தலைமுறைக்காம்.
அழிவினில் காத்திட அரியதோர் அவதாரமெடு.
விழிகளின் காட்சியில் சத்தியக் கனலாய் ,
மொழிதனில் கனியாய், தொழிலினில் துடுப்பாய்,
எழிலுறும் வாழ்வினில் இறைவனின் முத்திரை,
வழியெலாம் பதித்து விடியலைப் போற்று.
ப. சந்திரசேகரன்.
No comments:
Post a Comment