Tuesday, December 29, 2015

புத்தாண்டு 2016.புன்னகைக்கிறது.





புத்தாண்டு 2016  புன்னகைக்கிறது
===============================  .
உதடுகளின் சாம்ராஜ்யத்தில்
புன்னகையையை அரியணை ஏற்றுவோம் !
பொய் மேகங்கள் பெயர்ந்து கலையட்டும்.
உதடெனும் பூச்செடி  உதிர்ப்பது
வண்ணமிடும்  உண்மை மலர்களாகட்டும் .
கையில் பணமும் கணக்குகள் பலவும்,
செய்யா அதிசியங்கள் செய்து காட்டிட,
ஐயம் அறியா அன்பைக் குவிப்போம் !
பூமியின் பலமே புதுமைகள் படைத்தலெனின்,
பலமாய் புதுமைகள் பழகுவோம் பாரில்.
பொருளோடு அருளும் புவியை வென்றிட
புத்தாண்டுப் படியினை பணிந்துத் தொடுவோம்!
படபடவென முன்னேறப் பயணம் தொடருவோம் !
                                                                              ப. சந்திரசேகரன்.  

No comments:

Post a Comment