மீண்டுவரும் நினைவுகளாய்!
நடக்கும் நிகழ்வுகள்
நாளைவரும் கனவுகளாய்!
காலம் கணக்கெடுக்க
முந்துவதும் பிந்துவதும்
பிழையாகி,சரியாகி
குறையும் நிறையுமாய்.
பாதைகளை, பாதங்களை,
வீதிகளின் நடுவில்,
மோதல்களாய் மாற்றிட,
சாதனைகள் சிரம் போற்றும்.
கிட்டப்பார்வையும் எட்டப்பார்வையும்,
நீதியின் நீட்சியினை,
நிழலாக்கி, நிசமாக்கி,
தீர்ப்புகள் திசைமாற,
நன்மையின் இலக்கணம்
நல்லவர்க்கு பொருள்கூறும்.
மனிதத்தின் மாட்சி
மனிதற்கே மாயமெனில்,
தனித்துவங்கள் தடமுறைக்கும்.
பொய்க்குவியும் புவியெங்கும்
மெய்யெழுந்து மேன்மையுறும் .
காற்றொதுங்கா கைக்குள்ளே,
மாற்றங்கள் மடைதிறக்கும்,
ஊற்றெடுக்கும் ஊக்கமது
வேற்றுமைகள் வேரறுக்க,
ஆற்றல்கள் ஆர்ப்பரித்து
ஆதிமுதல் அந்தம்வரை,
சூதுதனை சுட்டெரிக்கும்.
புத்தியினை புனரமைத்து,
புத்தாண்டே பூரிக்கும்.
ப சந்திரசேகரன்.

❤️
ReplyDelete