Sunday, April 13, 2025

தேர்களின் தெய்வமெல்லாம் ,

   இனிய சித்திரைத் திருநாள்/

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

           (ஏப்ரல் 14,2025)

===================================

சத்திரங்கள் சரிந்தாலும்,

சித்திரை வந்தால், 

சாத்திரங்கள் கதை பேசும்! 

ஊர்சுற்றித் தேர்வர,

தெருவெல்லாம் ஊர்க்கூடி, 

தேரிழுத்துத் தெம்புரைக்கும்! 

நெஞ்சில் நேர்மையுடன் 

வஞ்சனையின் வேரறுத்து, 

அஞ்சாத ஆக்கமுடன் 

ஆற்றலின் அரிச்சுவடி, 

போற்றும்வழி பெருக்கெடுத்து,

மாற்றங்களின் மடியாகும்.!

எல்லோர்க்கும் நன்மையெனில், 

மாற்றங்கள் மாண்புபெறும்!. 

தேர்களின் தெய்வமெல்லாம் 

சோர்விலா அன்பின் 

சுடர்விடும் ஒளியாகி, 

சூழ்ந்தடர்ந்துப் பரவி,

சூழ்ச்சியிருள் முறியடித்து,

சித்திரைச் தேர்களின் 

முத்திரைப் பதிக்கும்!

ப.சந்திரசேகரன்.

No comments:

Post a Comment