தரம் தேய்ந்திடின்,
தரவுகள் தளர்ந்து திசைமாறும்.
உரம் தேய்ந்திடின்,
உறுதியின் ஊட்டம் உதிரும்.
திறன் தேய்ந்திடின்,
தலைமையே தடம் புரளும்.
பறை தேய்ந்திடின்,
முரசின் மூச்சு நிற்கும்.
சிரம் தேய்ந்திடின்,
சிந்தனையில் சீழ் பிடிக்கும்.
மரம் தேய்ந்திடின்,
மறுமுனை கிளைச் சாயும்.
புறம் தேய்ந்திடின்,
அகத்தின் அகந்தை வீழும்.
நிறம் தேய்ந்திடின்,
நளினம் நலிந்து போகும்.
வரம் தேய்ந்திடின்,
இறையருள் தூரம் கூடும்.
பிறை தேய்ந்திடின்,
பிறகது வளர்ந்து ஔியூட்டும்.
கரம் தேய்ந்திடின்,
களத்தினை தோல்வி கவ்வும்.
அறம் தேய்ந்திடின்,
அடிமனையே ஆட்டம் காணும்.
மனம் தேய்ந்திடின்,
மகிழ்ச்சியை முகம் புதைக்கும்.
மானம் தேய்ந்தின்,
மரணம் கூட மாண்பிழக்கும்.
ப.சந்திரசேகரன்.
"....மானம் தேய்ந்திடின்,
ReplyDeleteமரணம் கூட மாண்பிழக்கும்...." மாணவனை ஆசிரியர் மாதிப்பிடலாம். ஆசிரியரை மாணவன் மதிப்பிட முடியுமா? No way but வேற லெவல் Sr உங்கள் சொல்லாட்சி💥