ஊரிலும் உலகிலும்,
யார் வாழ்வது?
யார் மடிவது?
யார் முடிவது ?
வீட்டிலும் வெளியிலும்,
பலமாய் வீதியிலும்,
பயணத்தின் பாதியிலும்,
சக்கரமாய்ச் சுழலும்
சதுரங்கக் கொலைககள்.
முற்பகல் வினைகளோ?
மூடி வைத்த பகையோ?
அரசியல் பகடையோ?
சிரசினில் சகடையோ ?
ஆதி எது,அந்தமெது,
சாதிக்கொலை சரவெடியில்!
வாரமிருக் கொலையெனில்,
பாரமது பூமிக்கே!
குோருவது யாரிங்கே,
கொடுமைக்குத் தீர்வு?
சட்டம் தன் கடமையைச் செய்யும்,
சங்கிலித் தொடர்களை,
மங்கிடும் மறதியாய்,
மக்களுக்கு விட்டுவிட்டு!.♪
கொன்றானைக் கொல்லுவதோ,
கொல்ல நினதை்தவனை
கொல்லநாள் குறிப்பதோ!
ஆதிக்கொலை,சாதிக்கொலை,
அத்தனையும் பெருக்கெடுத்து,
கொலை கொலையாய்ப் பிரசவிக்கும்
விளைநிலத்தின் காலமிது.
ப.சந்திரசேகரன்.
Life is the precious gift blessed by the Grace of the Almighty to one and all of this Universe including plants and animals too.🙏🏻
ReplyDeleteஅடியோடு களையப் பட வேண்டிய கொலை, அறுபத்தி ஐந்தாவது கலையாக பரிணாம வளர்ச்சியை எட்டிவிட்டது வருந்தத் தக்கது
ReplyDelete