Saturday, April 13, 2024

சித்திரைச் சிறகுகள்

  (இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்).


சீருடை பள்ளிக்கு;தேருலா ஊருக்கு.

வேரிலா மரமிங்கு பூமியில் எங்கிருக்கு?

நேர்வழிப் பாதையிலும் நெருஞ்சிமுள் குற்றிடும்.

தேர்வழிப் பின்தொடர நெரிசலது பற்றிடும்.

சூரறைப் போற்றிடச் சூளுரைத் தேவையே!.

யார்வழிப் போயிடினும்,அவர்வழியே அவரிலக்கு.

போரிடும் தோள்களெனத் தேர்களைத் தாங்கிவர,

தாரிலாச் சாலைகூட,தேருக்கு வழியமைக்கும்.


நித்திரைக் கனவிலும் சித்திரைத் தேர்தோன்றும்.

ஒத்திகை உள்ளிலெழ,உத்தமமாய் ஒளிகாணும்.

கத்திரி வெயிலின் கடும்வெப்பம் தாங்கிடவும்,

புத்தரின் புரிதலுடன் பூசல்கள் புதைத்திடவும்,

இத்தரையில் மானுடம் ஒன்றுபட்டு இறையுணர,

சித்திரைச் சிறகுகள் வான்பறந்து வரம்கூட்டும்.

ப.சந்திரசேகரன்.






1 comment:

  1. இத்தரை மகிழ சித்திரை வந்ததே...

    ReplyDelete