Tuesday, July 4, 2017

இங்கே எதுவுமே.............

இங்கே எதுவுமே மெதுவாயில்ல.
காலத்த எடுத்துக்கோ,
புயலையே புரட்டிப்போடுற வேகம்.
இங்கே எதுவுமே அமைதியா இல்ல
மனச எடுத்துக்கோ,
அதுக்குள்ளாற எப்பவுமே மல்யுத்தம்தான்.
இங்கே எதுவுமே சுத்தமில்ல.
ஆர்கானிக் உணவூன்னு சொல்லி
எத்தனைபேர் நம்மகிட்ட ஆட்டைய போடுறாங்க.
இங்கே எதுவுமே உண்மையில்ல.
அரசியல எடுத்துக்கோ,
அம்புட்டும் அளப்புதான்.
இங்கே எதுவுமே புனிதமில்ல.
கொடும கொடுமைன்னு கோயிலுக்கு போனா,
அங்கே அதுக்குமேல கொடும தாண்டவமாடுது.
இங்கே எதுவுமே தரமில்லை.
வாடகைக்கு போயிட்டதால,
தாய்மைகூட தரமிழந்து தவிக்குது.
ஆமா இப்பிடி பொலம்புறியே நீ யாரு?
அட அது தெரியாமத்தான ஒங்கிட்ட புலம்பிட்டிருக்கேன்.
இங்கே எதுவுமே நெசமில்லே, என்னையுஞ் சேர்த்து. 
                                                                   ப.சந்திரசேகரன்.        

No comments:

Post a Comment