Wednesday, January 11, 2017
பொங்கல் திருநாள்.14/01/2017
பூரிப்புப் பொங்கல்.
ஒருவராய் நின்றிடின், ஊரென்ப துண்டோ!
பருவம் பலதும், கூடிடும் வாழ்வில்,
இரவினை இருளும், பகலினை ஒளியும்,
நெருங்கிடாப் பொழுது நாளென் றாகுமோ!
எருவும் மண்ணும்
கலந்திடா திருப்பின்,
பெருகுமோ பூமியில் பசுமையின் பாங்கு;
பிரிவின் பொருளது, தனிமையின் வலியாம்;
புரிந்திடின் ஆறுமாம், பூசலின் காயம்.
அரிதெனக் கிட்டிய மானுடப் பிறவியில்,
ஆர்த்தலில் அடங்குமோ, ஆளுமைத் தேர்ச்சி !
நேர்ந்திடும் நன்மைகள் நிறைவுடன் தங்கிட,
ஊர்ந்து சென்றாலும்,ஒருவழிச் செல்வோம்.
பார்த்தலும் கேட்டலும் பலபெருள் கூறிட,
நேரில் அறிந்திடும் நன்மைக் காட்சியே,
ஊரையும் உலகையும் உயர்த்திடும் என்று,
பூரித்துத் திளைத்திட, பொங்கிடும் திருநாள்.
ப. சந்திரசேகரன்.
Subscribe to:
Post Comments (Atom)
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தனிமை என்பதை கிளைபிரிந்த சமூகத்தை பலவழிகள் போனாலும் இங்கே வந்து தன் உற்றார் சுற்றார் என்று மட்டும் அன்றி நம் வாழ்வுக்கு உதவிய மண், தன தான்யங்கள் செழிக்க உதவிய பசுவுக்கும் நன்றி செலுத்தும் திருநாள் என்பதை கவிதை யாக தந்த உங்களுக்கு நன்றி.
ReplyDelete