Thursday, February 18, 2016

காவியக் கலைஞர்,இனியவை இருபது.



                 
       { பிடித்தவர்களுக்கு இனிக்கும்;மற்றவர்க்கு கசக்காது எனத் தோன்றும்   வரிகள்}
          1} அரசியல்  ஞானத்தின் ஆத்மகாரகர்  
          2} ஆட்சிக் களத்தின் ஆருடம் அறிந்தவர் 
          3} தமிழை முரசென ஒலிக்கச் செய்தவர்.   
          4} தானே கற்றுத் தானே தெளிந்தவர்.
          5} திராவிட மரபின் மரபணு வானவர்.
          6} தீர்க்கமாய் முடிவுகள் எதிலும் எடுப்பவர்.
          7} சமூக நீதியில் சந்நிதி கண்டவர்.
          8} சான்றுகளோடே சபையுறை ஆற்றுபவர்.
          9} முதுமையின் முனகலை முடக்கிப்போட்டவர்.
         10} மூன்றெழுத்து இயக்கத்தின் முழுமூச்சானவர்.
         11} குரலை உயர்த்தாது குறளை உயர்த்தியவர்.
         12} கூர்ந்த அறிவினில் கோபுரம் போன்றவர்
         13} தொன்மைத் தமிழின் செம்மொழி கண்டவர்
         14} தோல்வித் தொடரில் துவண்டு விழாதவர்.
         15} ஒற்றைச் சொல்லில் இரட்டுற மொழிபவர்.         16} ஓய்விலா உழைப்பினை உதிரமாய்க் கொண்டவர்.
         17} தமிழ்ப் பசி தீர்ப்பதில் அட்சய பாத்திரம்.
         18} தாளடி நடவென தாள்களை ஆய்பவர்.
         19} நினைவுகள் காப்பதில் நிகரற்ற கணினி
         20} நீள்புவி போற்றிடும் காவியக் கலைஞர்.

                                                                .சந்திரசேகரன்.
                    
                                 


No comments:

Post a Comment