Wednesday, January 13, 2016

பொங்குக, பணிவிழா !




  பொங்குக, பணிவிழா !
கதிரெனத்  தழைத்து  கரும்பென  உயர்ந்து
உதிரா  மகிழ்வினை  உலகினுக் களித்திட
அதிர்வுறும்  அன்பினை  அறமுடன் கலந்து ,
எதிரும்  புதிரும்  இணைத்திடும்  பொங்கல் !
பொங்கிடும்  புதுமைக்கு  பழமையே  விதை;
தங்கமாய்  மிளிரும்  தரணியின்  பசுமைக்கு
மங்கிடா  உழைப்பு  மழையெனப்  பொழிந்து ,
தேங்காது   இறங்குமே  இன்னுயிர்   ஈன்றிட  .
ஈன்றவைக்  கனிந்து,  காணும் பொங்கலாய்
இன்புறும்  மேடைகள்  மக்களுக்  களித்து,
வீணாய்ப்  போகும்  பொழுதுகள் பயன்பெற,  
மீண்டும்  மண்ணில்  பணிவிழா  பெருக்கும்..
பெருகிடும்  உழைப்பே  பெருமிதம்  படைக்கும்;
அருவியாய்ச்  சுரந்திடும்  ஆற்றலும்  ஆக்கமும் ,   
தருமமாய்த்  திறமையாய்,  தழுவித்  தோன்றலே ,
உருவமாய்  உயிர்த்தெழும்  உலகியல்  பொங்கல்.                                                                                                                                                                                                                     ப.சந்திரசேகரன்.    

No comments:

Post a Comment